அ.கதிரேசன், அரக்கோணம்
தேர்தல் ரிசல்ட்டுகளெல்லாம் நமக்கு முன்கூட்டியே தெரிந்தால்?
ஜெயிக்கிற கட்சியில் சீட்டு வாங்கி எம்.எல்.ஏ.வாகிவிடலாம். அரசியல் பத்திரிகைகளுடன் டீல் போட்டு, மிகத்துல்லியமான கருத்துக் கணிப்புகளை வெளி யிட்டு வாயடைக்க வைக்கலாம். பக்கத்துவீட்டுக்காரர்களுடன் பந்தயம் கட்டி ஜெயிக்கலாம்.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
குடியாத்தம் வயநாடு நிலச் சரிவு பேரிடரில் வீடு, உடமை களை இழந்த 555 பேரின் வங்கிக் கடன்களான ரூ. 18.75 கோடியை கேரள மாநில அரசே திரும்பச் செலுத்த உள்ளதாமே..?
ஏதோ, அம்பானி, அதானி, கார்ப்பரேட் கடனென்றால் அரசு பொறுப்பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்களின் கடன்களையெல்லாம் ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று தலையெழுத்தா? வெறும் 18.75 கோடி ரூபாய் கடன்தானே என பரிதாபப்பட்டால் நாளை பூகம்பம், வெள்ளம் என ஆயிரக்கணக்கான கோடிகளைத் தள்ளுபடி செய்யச் சொல்லி வந்து நின்றுவிடமாட்டார்களா? அதையெல் லாம் தள்ளுபடி செய்தால் நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டுவிடாதா?.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/05/mavali1-2026-02-05-17-19-35.jpg)
சிவராமசுப்பிரமணியன், கல்லிடைக்குறிச்சி.
ராகுல் ஓய்வெடுக்கும் தலைவர் என பா.ஜ.க. கூறுவது எப்படி இருக்கிறது?
இந்திய தரைப்படைத் தளபதி யாக இருந்த மனோஜ் முகுந்த் நரவணே எழுதி, இன்னும் வெளி வராத "ஃபோர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ் டினி' எனும் சுயசரிதையில் 2020-ல், இந்திய எல்லைக்குள் சீன டாங்கிகள் ஊடுருவியபோது, என்ன செய்வது என இந்திய அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களைத் தொடர்புகொண்டு கேட்டதாகவும், பாதுகாப்புத் துறை அமைச்சர் முதல் பிரதமர் மோடி வரை அப்போது எத்தனை சுறுசுறுப்பாகச் செயல்பட்டார்கள் எனவும் அம்பலப்படுத்தியிருக்கிறார் நரவணே. இந்த லட்சணத்தில் இவர்கள் எதிர்க் கட்சித் தலைவரை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
என். இளங்கோவன், மயிலாடுதுறை.
தலைகுனிந்து வெளிநாடு களில் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேதனை தெரிவித்துள்ளாரே?
கடன் வாங்குவதற்கு அப்படியெல்லாம் தலை குனிய வேண்டிய தில்லை. அமெரிக்கா, இந்தியா உள்பட உலகின் பெரும்பாலான நாடுகள் கடன்வாங்கித்தான் காலம் தள்ளுகின்றன. வாங்கின கடனுக்கு வட்டி கட்டமுடியாத நிலை வரும்போது, கடன் தரவே சர்வதேச நிதியமைப்புகள் யோசிக்கும். இன்றைக்குப் பணம் கேட்டால் இழுத்தடித்து, நிபந்தனை விதித்து மெதுவாக ஆறு மாதம் கழித்துத் தரும். அந்த நிலை வரும்போது தலைகுனிய வேண்டி யதுதான். இதுவரைக்கும் வாங்கிய கடன்களை நாட்டின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தாமல் ராணுவ அதிகாரிகளும், பாகிஸ்தான் அரசியல்வாதி களும் தங்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்தியதால் தான் இந்த நிலை. இவர்களைத் தேர்வுசெய்ததற்கு பாகிஸ்தான் மக்கள்தான் தலைகுனியவேண்டும்.
வண்ணை கணேசன், கொளத்தூர்
"எப்படியிருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிட்டாரே' என்று நயினார் நாகேந்திரன் வருத்தப்பட்டிருக்கிறாரே?
செங்கோட்டையனுக்கு அப்படி என்ன ஆகிவிட்டது? நயினார் நாகேந் திரன் சில வருடங்களுக்கு முன் அ.தி. மு.க.விலிருந்து பா.ஜ.க.வுக்கு தாவினார். இப்போது அ.தி.மு.க.விலிருந்து த.வெ.க.வுக்குத் தாவியிருக்கிறார் செங்கோட்டையன். மாறிய கட்சியைத் தவிர, கட்சி தாவியதில் இரண்டு பேரும் ஒன்றுதானே!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/05/mavali2-2026-02-05-17-19-05.jpg)
ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு
எல்லா துறைகளிலும் சாதனை படைக்கும் பெண்கள், ஏன் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க முன்வருவதில்லை?
அதுதான் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் காளையர்களையே பார்வையால் அடக்கி ஒடுக்கி வீழ்த்திவிடுகிறார்களே. பன்னிரண்டடி தாவுபவர் களை, ஆறடி தாவ அழைப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது!
பு.முரளிதரன், சென்னை-87
துஷ்டனைக் கண்டால் ஏன் தூர விலகிப் போகவேண்டும்?
துஷ்டனோடு சேர்ந்தால் நமக்கும் துஷ்ட குணம் தொற்றும் என்பதனால்தான். மகாபாரத கர்ணனுக்கு நாயகனுக்கான எல்லா குணங்களும் இருந்தன. ஆனால், துரியோதன சகவாசம் அவனது அழிவுக்கான தொடக்கமாக அமைந்தது.
எஸ். கதிரேசன், பேரணாம்பட்டு
இந்திய -ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதற்காக பிரதமர் பெருமிதப்படுகிறாரே?
ஒப்பந்தத்தால் பயனில்லை. ஆனால் அதன்மூலம் ஐரோப்பாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித் தால்தான் பயன். மாறாக, ஐரோப்பிய நாடுகளின் ஏற்றுமதி அதிகரித்து இந்திய உற்பத்தியாளர்களைப் பாதித்தால் சிக்கல்தான்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/05/mavali-2026-02-05-17-18-33.jpg)